திருப்பலி பதிவு இணைப்பு : https://forms.gle/pfqdf88mY4Zm9kFPA
உங்கள் அனைவருக்கும் நமது பங்கு பாதுகாவலியான ஜெபமாலை அன்னையின் திருவிழா வாழ்த்துக்கள். தனது அபரிமிகுந்த பரிந்துரையால் திருச்சபையை காத்து வரும் நமது அன்னை உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நிறைவாக காத்து அருள் புரிவாராக.
பங்கு திருவிழாவினை கொண்டாடும் இந்த உன்னதமான வேளையில், உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி - வரும் செவ்வாய்க்கிழமை அக்டோபர் 12-ம் தேதி முதல் நமது கோவிலில் திருப்பலிகள் ஆரம்பிக்கப்படும். திருப்பலிகளின் அட்டவணை பின்வருமாரு :
1. திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி கிழமைகளில் ::
- காலை 7.00 மணி; மாலை 7.00 மணி (ஆங்கிலம்)
2. புதன்கிழமை :
- காலை 7.00 மணி (ஆங்கிலம்); மாலை 5.30 மணி (தமிழ்); மாலை 7.00 மணி (கொங்கனி)
3. சனிக்கிழமை : :
- காலை 7.00 மணி; மாலை 7.00 மணி (ஆங்கிலம் - ஞாயிறு வழிபாடு)
4. ஞாயிற்றுக்கிழமை திருப்பலிகள் :
- காலை 7.00 மணி (கொங்கனி); 8.30 மணி (ஆங்கிலம்); 10.00 மணி (தமிழ்);
11.30 மணி (ஆங்கிலம்); மாலை 6.00 மணி (ஆங்கிலம்)
கோவிட் கட்டுப்பாடு நிமித்தம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி கடன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உங்கள் வசதிக்கேற்ப திருப்பலியில் பங்கேற்க வலியுறுத்துகிறோம்.
அக்டோபர் 12 முதல் நமது பங்கின் ஆன்லைன் திருப்பலி ஒளிபரப்புகள் ரத்து செய்யப்படும். கோவிலில் திருப்பலியில் கலந்துகொள்ள இயலாதவர்கள் நமது அல்லது மற்ற மறைமாவட்டங்களிலிருந்து ஒலி பரப்பாகும் திருப்பலியில் கலந்து பயன் பெறுமாறு விண்ணப்பிக்கிறோம்.
கோவிட் கட்டுப்பாடு நிபந்தனையின் காரணமாக நமது கோவிலில் ஒரு குறிப்பிட்ட திருப்பலியில் / சடங்கில் 140 மக்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். எனவே பங்கு மக்கள் தங்களுக்கு விருப்பமான திருப்பலியில் கலந்து கொள்ள திருப்பலி தேர்வு / பதிவு பத்திரம் செயல்படுத்தப் படுகிறது. திருப்பலியை கீழ்கண்ட இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம்.
திருப்பலி பதிவு இணைப்பு : https://forms.gle/pfqdf88mY4Zm9kFPA
திருப்பலி பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு :
1. பதிவு செய்ய முந்துபவர்களுக்கே திருப்பலிக்கான இடம் ஒதுக்கப்படும். ஓரு திருப்பலிக்கான இடங்கள் நிரம்பிவிட்டால் அடுத்த திருப்பலியில் பதிவு செய்ய முயற்சிக்கவும்
2. வெல்கம் மினிஸ்ட்ரி தன்னார்வு தொண்டர்கள் உங்கள் பதிவினை கோவிலின் நுழைவு வாசலில் சரி பார்க்கும்பொழுது உங்கள் பெயரையும், உங்கள் அன்பிய பெயரையும் தெரிவிக்கவும்.
3. கோவிலில் மிஞ்சிய இடமிருந்தால் மட்டுமே பதிவில்லாமல் திருப்பலியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும். கூடிய வரை திருப்பலிக்கு பதிவுடனேயே வருமாரு கேட்டுக்கொள்கிறோம்.
4. திருப்பலிக்கு ஒரு பத்து நிமிடம் முன்னதாகவே வரவும். திருப்பலி ஆரம்பித்து 10 நிமிட்ங்களுக்கு பிறகு பதிவு ரத்து செய்யப்பட்டு பதிவில்லாதவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
5. 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், 10 வயதிற்குட்பட்ட சிறார்கள், கூட்டு நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், காய்ச்சல் மற்றும் கோவிட் அறிகுறி உள்ளவர்கள் திருப்பலியில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்.
6. கோவிட் நெறிமுறைகள் மற்றும் தன்னார்வு தொண்டர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.
7. இணையதள வசதி மற்றும் தகுந்த தொலைபேசி இல்லாதவர்களுக்கு திருப்பலி பதிவு செய்ய உதவவும்.
8. திருப்பலி பதிவு செய்ய அறியாதவர்கள் தன்னார்வு தொண்டர்களின் உதவியை நாடவும். அவர்களை ……………… தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கோவில்கள் திறப்பதுபற்றி அவ்வப்பொழுது வரும் விபரங்களை பங்கின் இணைய தள பக்கம், மற்றும் அன்பிய குழுவில் பதிக்கப்படும் செய்திகளை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
நமது பேராயர் கர்தினால் அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவில்கள் திறக்கப்பட வழி வகுத்து தந்த நமது ஆண்டவருக்கு நன்றி கூறி, இந்த கொடிய நோயிலிருந்து பூர்ண நிவாரணமளிக்க மன்றாடுவோம்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
அருட்தந்தை (டாக்டர்) ஃப்ரான்சீஸ் கர்வாலோ
பங்கு தந்தை
ஜெபமாலை அன்னை ஆலயம்
கோரேகான் மேற்கு
Comments